திருவொற்றியூரில் சிக்னல் கோளாறு: கும்மிடிப்பூண்டி - சென்னை ரயில் சேவை பாதிப்பு

3 months ago 17

சென்னை: திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால், கும்மிடிப்பூண்டி - சென்னை நோக்கி வந்த மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடங்களில், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடம் முக்கியமானதாகும். இந்த வழித்தடத்தில் தினசரி 120-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியான திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

Read Entire Article