திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற பகுதியில் அரசு பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஆந்திரா ஓங்கோல் அடுத்த பிரகாசம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கொப்போலு என்ற இடத்தில் கோழி முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேரும், கார் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர்.
The post திருவாரூர் அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.