திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,181 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.
* திருவாரூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், கோ-லொகேஷன் சென்டர், பள்ளிக் கட்டடங்கள், பொது நூலகக் கட்டடங்கள், பேருந்து நிழற்குடைகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் என மொத்தம் 42 கோடியே 8 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 1209 முடிவுற்ற பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 9 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் செலவில் சீமாங்க் கட்டடம், ஆதிச்சபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொது சுகாதார அலகு கட்டடம், பெரும்புகலூரில் 20 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம், கூத்தாநல்லூரில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடுவங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கலை பண்பாட்டு அறை, ஆய்வகம் மற்றும் நூலகம் கட்டடங்கள்: பொது நூலகத் துறை சார்பில், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை மற்றும் எடையூர் ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் கிளை நூலகங்கள்; நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நன்னிலம் பேரூராட்சி, மணவாளன்பேட்டையில் 19 இலட்சம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கொற்கை கால்நடை பண்ணையில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் வற்றுப் பசுக்களுக்கான வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொட்டகை, 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கான கான்கிரீட் கொட்டகை, 25 இலட்சம் ரூபாய் செலவில் பண்ணை மேலாளர் அலுவலகக் கட்டடம், 30 இலட்சம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்களுக்கான கொட்டகை; வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருவாரூர்,
உதயமார்த்தாண்டபுரம், கட்டிமேடு, எடையூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் விதைக் கிடங்குகள், திருவாரூரில் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அரசு வேளாண் கருவிகள் மற்றும் பணிமனை அலுவலகக் கட்டடம், குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஆகிய இடங்களில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் உரக்கிடங்குகள்;
வனத்துறை சார்பில், திருவாரூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் வனத் தீ கட்டுப்பாட்டு மையக் கட்டடம் மற்றும் திருவாரூர் வனக்கோட்டம், முத்துப்பேட்டை சரகத்தில் படகு குழாம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புப் பணிகள்; பதிவுத்துறை சார்பில், திருவாரூர் பதிவு மாவட்டத்தில் கூத்தாநல்லூரில் 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
* திருவாரூர் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், திருவாரூர் மாவட்டத்தில், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2150 புதிய வீடுகள், அயோத்திதாச பண்டிதர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், நபார்டு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 129 கோடியே 11 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2,328 புதிய திட்டப் பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பேரளம், ராயபுரம் கொட்டாரக்குடி ஆகிய இடங்களில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூந்தோட்டம், பெரும்பண்ணையூர், ஆலத்தம்பாடி ஆகிய இடங்களில் 1 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொது சுகாதார அலகுக் கட்டடங்கள், ஆலங்குடி மற்றும் எடமேலையூர் ஆகிய இடங்களில்
90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள், நீடாமங்கலம் மற்றும் குடவாசல் ஆகிய இடங்களில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைக் கட்டடங்கள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 8 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 86 தார்ச்சாலைகள் மேம்படுத்தும் பணிகள், குளுந்தான் குளத்தை 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள், சந்தானம் நகரில் 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தும் பணிகள், தியாகபெருமாநல்லூரில்
5 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள்,
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 1 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கொரடாச்சேரி, பேரளம் மற்றும் நன்னிலம் ஆகிய பேரூராட்சிகளில் 3 கோடியே 91 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள், நன்னிலம் பேரூராட்சி, மாரியம்மன் கோவில் தெருவில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம், வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல் ஆகிய பேரூராட்சிகளில் 3 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைப் பணிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், திருத்துறைப்பூண்டி வட்டம், கொருக்கை ஊராட்சியில், 3 கோடியே 90 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நரிக்குறவர் இன மக்களுக்கு 77 புதிய வீடுகள் அமைக்கும் பணிகள்; என மொத்தம் 172 கோடியே 17 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
* திருவாரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 9325 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 7377 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், மகளிர் திட்டத்தின் சார்பில் 10,000 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு வங்கி நேரடிக் கடன்கள், நலிவு நிலை குறைப்பு நிதி.
சமுதாய முதலீட்டு நிதி சுழற்சி முறை கடன்கள் வழங்குதல், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 25,525 பயனாளிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், தாட்கோ சார்பில், 2078 பயனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனம், கறவைமாடு வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் சார்பில் அடையாள அட்டைகள் வழங்குதல்,
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், 113 பயனாளிகளுக்கு வங்கிக்கடன் மானியம், காதொலிக் கருவிகள், செயற்கைக்கால்கள், தையல் இயந்திரங்கள், சக்கர நாற்காலிகள், தனியார் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களின் ஊதியம் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 60 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 9,354 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மகப்பேறு நிதி உதவிகள், கர்ப்பணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்,
கண்ணொளி காப்போம் திட்டத்தில் உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 761 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து மரண நிதி உதவித் தொகை, இயற்கை மரண நிதி உதவித் தொகை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 100 குழுக்களுக்கு நுண்கடன் வழங்குதல்; பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை சார்பில்,
1041 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகள், தையல் இயந்திரங்கள், தனிநபர் கடன்கள், குழுக் கடன்கள், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 610 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 500 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், கூட்டுறவுத் துறை சார்பில்,
337 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் கடன்கள், மத்திய கால விவசாயக் கடன், தாட்கோ கடன் மற்றும் பண்ணை சாரா கடன் என பல்வேறு துறைகளின் சார்பில் 600 கோடியே 55 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வை.செல்வராஜ், முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி.கே.கலைவாணன், கே.மாரிமுத்து, நாகை மாலி, துரை சந்திரசேகரன், க. அன்பழகன், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், இ.ஆ.ப., தாட்கோ தலைவர் இளையராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! appeared first on Dinakaran.