திருவாடானையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

3 months ago 10

திருவாடானை, நவ. 16: திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பாக ரூ.12 மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கரு.மாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்து கலையரங்க கட்டிட பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் முகமது முக்தார், வட்டார காங்கிரஸ் தலைவர் கோடனூர் கணேசன், நகர தலைவர் செந்தில்குமார், திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

The post திருவாடானையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை appeared first on Dinakaran.

Read Entire Article