திருவள்ளூரில் மாபெரும் பொருட்காட்சி: நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்

4 months ago 13

திருவள்ளூர்: திருவள்ளூர் சிவிஎன் சாலையில் மாபெரும் பட்டாம்பூச்சிகளின் உலகம் என்ற பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் குத்து விளக்கு ஏற்றிவைத்து, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக பொழுதுபோக்கும் வகையில் ராட்டினங்கள், ஜாயிண்ட் வீல் ராட்டினம், ரோஸ் ரோலர் ராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், கப்பல் ராட்டினம், மயில் ராட்டினம், ட்ரெயின் ராட்டினம், மயில் ராட்டினம், ஜெட் ராட்டினம், கார் ராட்டினம், பனி மழை கொண்டாட்டம், லக்கி கேம், த்ரோ பால் கேம் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வண்ண விளக்குகளால் வண்ணத்துப் பூச்சிகளின் அசையும் செயற்கை பூச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்காட்சியை காண வரும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு மகிழ, பாப்கார்ன், பானிபூரி, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தங்க பூமி ரியல் எஸ்டேட் ஸ்டால், ஹெர்பல் லேண்ட் கார்டன், சிட்டி ரியல் எஸ்டேட் ஸ்டால், பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள் கடை மற்றும் சிறுவர்கள் விளையாட ஏராளமான பொழுதுபோக்கு உபகரணங்கள் அனைத்தும் சிறந்த முறையில் பொருட்காட்சியின் உரிமையாளர் விநாயகமூர்த்தி செய்துள்ளார்.

முதல் நாளான நேற்று முன்தினம் நுழைவு கட்டணம் ஏதுமின்றி அனைத்து பொதுமக்களும் இலவசமாக பொருட்காட்சியினை பார்த்து, விளையாட்டு உபகரணங்களில் விளையாடிச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் அயூப் அலி, தங்க பூமி ரியல் எஸ்டேட் நிறுவனர் ரமேஷ், ராட்டினம் உரிமையாளர் வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூரில் மாபெரும் பொருட்காட்சி: நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article