திருவள்ளூர்,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக திருவள்ளூரில் 133 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், மழை பாதிப்பு குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க 1077 என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.