திருவள்ளுவர் பல்கலையில் 28,417 மாணவர்களுக்கு பட்டங்களை கவர்னர் வழங்கினார்

7 months ago 37

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 19வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் முன்னிலை வகித்தார். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன பெங்களூரு இயக்குனர் துசார்காந்தி பெஹாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் 86 பேருக்கு முனைவர் பட்டம், 13 துறைகளை சேர்ந்த 28,417 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன பெங்களூரு இயக்குனர் துசார் காந்தி பெஹாரா பேசுகையில், ‘உலக அளவில் நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. ஆசியாவில் வங்கதேசத்தை தொடர்ந்து அதிக மாசுபட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது’ என்றார்.

The post திருவள்ளுவர் பல்கலையில் 28,417 மாணவர்களுக்கு பட்டங்களை கவர்னர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article