“திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட முயற்சிப்பதே திமுக கூட்டம் தான்” - வானதி சீனிவாசன் விமர்சனம்

2 weeks ago 2

கோவை: “திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட முயற்சிப்பதே திமுக கூட்டம் தான்” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருக்குறளை பின்பற்றினால் தான் தமிழகமும், உலகமும் காப்பற்றப்படும். அதற்கு திருவள்ளுவரை யாரும் கபளீரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழகத்தில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயற்சிக்கிறது.” என கூறியிருக்கிறார்.

Read Entire Article