திருவனந்தபுரம் அருகே கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் மீது பாதுகாப்பு வாகனங்கள் மோதல்

3 months ago 11

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று மாலை கோட்டயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரத்திற்கு திரும்பினார். இவரது காரின் முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை சென்று கொண்டிருந்தன.

திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அருகே முன்னால் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு பெண் வலதுபுறம் திரும்பினார். பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாகனத்தின் டிரைவர் அந்தப் பெண்ணின் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட்டார்.

ஆனால் இதை எதிர்பார்க்காததால் பின்னால் வந்த முதல்வர் பினராயி விஜயனின் காரும், பாதுகாப்பு வாகனங்களும், ஆம்புலன்சும் சடன் பிரேக் போட்டதில் அவை ஒன்றுடன் ஒன்று லேசாக மோதின. இதில் முதல்வர் பினராய் விஜயனின் கார் உள்பட அனைத்து வாகனங்களும் லேசான சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிறிது நேரத்திற்குப் பின் முதல்வர் பினராயி விஜயன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post திருவனந்தபுரம் அருகே கேரள முதல்வர் பினராயி விஜயனின் கார் மீது பாதுகாப்பு வாகனங்கள் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article