திருவண்ணாமலை: மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

2 months ago 15

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள வடவாண்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (34 வயது), விவசாயி. இவரது மனைவி காமாட்சி.

நேற்று முன்தினம் அழிவிடைதாங்கி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள குளக்கரையில் ராஜசேகரன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென ராஜசேகரன் மீது மின்னல் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து ராஜசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article