திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை

13 hours ago 1

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 13-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

சுமார் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், மழை மற்றும் பலத்த காற்றிலும் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இந்நிலையில், மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை 11 நாட்களுக்கு பிறகு இன்று கீழே இறக்கி கொண்டு வரப்பட்டது. செங்குத்தான மலைப்பாதையில் தீப கொப்பரை இறக்கி கொண்டு வரப்பட்டது தொடர்பான டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Read Entire Article