திருவண்ணாமலை அருகே சலூன் கடை ஊழியரை தாக்கிய வி.சி.க. பிரமுகர்

4 weeks ago 6
திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் டூவீலர் மீது கார் இடித்ததால் கேள்வி எழுப்பிய சலூன் கடை ஊழியரின் முகத்திலும், வயிற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரப் பொறுப்பாளர் அருண்குமார் என்பவர் ஓங்கி குத்தும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார் நேற்று இரவு வேலை முடிந்து சலூன் கடை முன்பு இருந்த டூவீலரை எடுத்து செல்ல முயன்றபோது, அருகாமையில் இருந்த கார் பின்னோக்கி வந்து இடித்ததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு தாக்கிய அஜித்குமாரை அருண்குமாரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அடித்த நிலையில், வலி தாங்க முடியாமல் கடைக்குள் ஓடிய அஜித்குமாரை பின்தொடர்ந்து சென்று தாக்கிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Read Entire Article