திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் ஆனிப் பிரம்மோற்சவ தேரோட்டம்

11 hours ago 2

பூந்தமல்லி அடுத்த திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனிப் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வாகன சேவை நடைபெற்றது. வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஜெகந்நாத பெருமாள் தேரில் எழுந்தருளியபின், காலை 8:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் மாட வீதிகளில் வலம் வந்து பின் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு வெள்ளவேடு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நாளை மறுநாள் (12ம் தேதி) மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.

மேலும் திருமழிசை மாட வீதிகளில் குடிநீர் பைப்லைனுக்காக பேரூராட்சி சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர சீரமைக்காததால், பெரிய தேருக்கு பதில் சிறிய தேர் இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article