திருமயத்தில் இலக்கை அடைவதற்கு சேகரித்த 5,000 பனை விதைகள் இருட்டறையில் வீணானது: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

3 months ago 9

திருமயம், டிச.2: தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம், நகரமயமாக்கல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மாநில மரமாக கருதப்படும் பனைமரம் பெருமளவு அழிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேசமயம் அரசும் பனை மரத்தை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பனைமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டி தன்னார்வலர்களுடன் இணைந்து பனை விதை பல்வேறு பகுதிகளில் நடவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மாவட்ட முழுவதும் சுமார் 1.5 லட்சம் பனை விதை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதன் தொடக்க நிகழ்வை கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் பிடிப்பு கண்மாயான கவிநாடு கண்மாயில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதை நடவு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்களை மாவட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதோடு இப்பணியில் வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு பனை விதை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களைக் கொண்டு கிராம பகுதியில் உள்ள நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய் பகுதிகள், கண்மாய், ஆறு கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் பனை விதைகளை அப்போது நடவு செய்தனர்.

பனை மரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருமயம் தாலுகா அலுவலக மேலதிகாரி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வருவாய் கிராமங்களில் பணி செய்யும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் ஒவ்வொருவரும் தலா 100 முதல் 200 பனை விதைகளை தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்து சேகரித்து வைத்தனர். ஆனால் பனை விதை நடவு செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள இருட்டு அறை கொட்டகையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்படாமல் வீணாகி கிடக்கிறது.

பனை விதைகளை சேகரிக்காமல் விட்டிருந்தால் தானாக அதுவாகவே முளைத்திருக்கும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 5 ஆயிரம் பனை விதைகள் திருமயம் தாலுகா அலுவலகத்தில் வீணாவது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவைகளில் பெரும்பாலானவை தற்போது முளைத்து உள்ளதால் ஆயிரக்கணக்கான பனை விதைகள் வீணாகிவிட்டது. மேலும் மாவட்ட முழுவதும் நடப்பு ஆண்டுக்குள் சுமார் 1.5 லட்சம் பனைவிதையினை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என பெரும்பாலானோர் குற்றம் சாட்டுகின்றனர். வீணாகிய விதைகளை அப்புறப்படுத்தி நல்ல விதைகளை உடனே நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்மூலம் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வும், தினசரி நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நீரழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் இருதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கவும், தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

The post திருமயத்தில் இலக்கை அடைவதற்கு சேகரித்த 5,000 பனை விதைகள் இருட்டறையில் வீணானது: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article