
சென்னை,
நாட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் விராட் கோலி- அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு, இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, அகாய், வாமிகா என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவின் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பேசிய அனுஷ்கா, திருமணமான முதல் 6 மாதங்களில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக நேரத்தை செலவிட்டதாக அவர் கூறினார்.
அவர் கூறுகையில், "நான் விராட்டைப் பார்க்கும்போது அல்லது அவர் என்னைப் பார்க்க வரும்போது அது விடுமுறை காலம் என்று மக்கள் கருதுகிறார்கள், ஆனால் அது உண்மை இல்லை.
எங்களுக்கு திருமணமான முதல் ஆறு மாதங்களில், 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக நேரத்தை கழித்தோம். ஆம், நான் உண்மையில் அதை கணக்கிட்டேன். அது எங்களுக்கு விலைமதிப்பற்ற நேரம்," என்றார்.