திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.2.5 கோடி ரொக்கம்

22 hours ago 2

புதுடெல்லி: இந்தியாவில் வரதட்சணை சட்ட விரோதம் என்ற போதிலும் பெரும்பாலான திருமணங்களில் வரதட்சணை கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஏழைகள் முதல் நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என பலதரப்பட்டோரும் தங்களது வசதிக்கு ஏற்ப வரதட்சணையாக நகை, பணம் மற்றும் பொருட்களை கொடுக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் வரதட்சணையாக ரூ.2.5 கோடி ரொக்கமாக வழங்கியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சூட்கேசில் வைத்து ரூ.2.56 கோடி ரொக்கத்தை மணப்பெண் வீட்டார், வரதட்சணையாக வழங்குவது போன்று காட்சிகள் உள்ளன. மேலும் சம்பிரதாய முறைப்படி ஒரு சடங்கிற்காக ரூ.11 லட்சம் மற்றும் பல்வேறு சடங்குகளுக்கு என ரூ.8 லட்சம் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். பலர், வரதட்சணைக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவிட்டனர். சிலர், இது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என பதிவிட்டனர்.

The post திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.2.5 கோடி ரொக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article