திருமங்கலம் பேருந்து நிலையத்தில் பலகாரக் கடையில் தி.மு.க. கவுன்சிலர் தாக்குதல் .!

6 months ago 20
மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள பலகாரக் கடை ஒன்றில் திமுக கவுன்சிலர் காசி பாண்டி என்பவர் தகராறு செய்து, தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை தூக்கி வீசும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடை உரிமையாளரான லோகேஸ்வரி என்பவர், பாண்டி என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அவரது கடையை உள்வாடகைக்கு எடுத்து நடத்தும் ஆறுமுகத்திடம், திருமங்கலம் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் காசி பாண்டியன், பாண்டிக்கு ஆதரவாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Entire Article