
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பாமக தொடங்கி இன்று 37ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதேவேளை, தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் கந்தசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி சவுமியா அன்புமணியும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.