திருப்பூர் பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று அழைத்துச் சென்ற அரசு அதிகாரிகள்

2 months ago 10

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி பகுதியில் 140 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 50க்கும் மேற்ப்பட்ட பள்ளி பருவ வயது குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி உதயக்குமார், தொடக்கப்பள்ளி மாவட்ட அதிகாரி பழனி,பல்லடம் வட்டாச்சியர் ஜீவா பல்லடம் ஒன்றிய அலுவலர் கனகராஜ் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் நரிக்குறவர் காலனி பகுதிக்கு சென்று பள்ளிக்கு செல்லாமல் இருந்த குழந்தைகளின் பெற்றோரிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தி உடனடியாக தங்கள் வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

பள்ளிக்கு செல்லாமல் இருந்த 50 மேற்பட்ட குழந்தைகளின் வீட்டிற்க்கு சென்ற அரசு அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

The post திருப்பூர் பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று அழைத்துச் சென்ற அரசு அதிகாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article