திருப்பூர் அருகே புகையிலை கேட்டு தர மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது

6 months ago 38
பல்லடம் அருகே அருள்புரத்தில் தனியார் மதுபான பாருக்கு அருகே இளைஞரை கொன்று விட்டு தப்பிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். குன்னாங்கல்பாளையத்தில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்த பூபாலன் என்பவரின் சடலத்தை மீட்ட போலீசார் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை அன்று இரவு மதுபான பாரில் குடித்துவிட்டு வெளியே வரும்போது, பூபாலனிடம் புகையிலை கேட்டதாகவும், அவர் தர மறுத்ததுடன் தகாத வார்த்தைகள் பேசியதால் கல்லை எடுத்து தலையில் தாக்கியதாகவும் கைதான இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article