திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

3 months ago 22
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில், நாட்டு வெடியை சட்டவிரோதாமாக தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 9 மாத பெண் குழந்தை, பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் பொன்னம்மாள் நகர், பொன்மலர் வீதியை சேர்ந்தவர் சத்தியப்பிரியா. இவரது சகோதரர் சரவணன். இவர் நம்பியூரில் கோவில் திருவிழாவில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளை தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பண்டிகை காலம் என்பதாலும், அவரது லைசென்ஸ் காலாவதியானாதாலும் தனது சகோதரி சத்தியப்பிரியா வீட்டில் சட்ட விரோதமாக வெடியை தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று வீட்டில் வழக்கம்போல் வெடியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராவிதமாக வெடித்ததுள்ளது . இதில் வெடியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் சத்தியப்பிரியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.மேலும் அவரது பக்கத்து வீட்டிலிருந்த 9 மாத பெண் குழந்தை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் அவருடைய வீடும், எதிர்புறமாக இருந்த லைன் குடியிருப்புகளும் என 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.
Read Entire Article