திருப்பூர், பிப்.19: திருப்பூர் பல்லடம் சாலையில் ஏராளமான பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் சரக்கு வாகனங்களிலும், சாலையோர கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு சீசன் காலத்திற்கு ஏற்றவாறு பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொய்யாப்பழம் சீசன் துவங்கியிருப்பதன் காரணமாக கொய்யாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இவை பல்லடம் சாலையில் சரக்கு வேன்களிலும், சாலையோர கடைகளிலும் விற்பனை அதிகரித்து உள்ளது. பழனி மற்றும் ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொய்யாப்பழங்கள் 23 கிலோ எடை கொண்ட டிப்பர் 1400 முதல் 1600 ரூபாய் வரையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவை சில்லறை விற்பனையில் கிலோ 60 முதல் 90 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகிறது.
The post திருப்பூரில் கொய்யா பழங்கள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.