*சாகுபடி பணிகள் துவக்கம்
திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் பூவந்தி, கிளாதிரி போன்ற செம்மண் பகுதியில் வரி தர்ப்பூசணி, பச்சை தர்ப்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக சூடான வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல காலநிலையில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் அதிகளவில் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பபட்டு வருகிறது. கோடை காலம் ஏப்ரல் மாதத்தில் துவங்கி விடும், அந்த கோடையின் தாகத்தை தணிப்பதற்கு தர்ப்பூசணி முக்கியமான பழமாகும். திருப்புவனம் நெல்முடிகரை பகுதியில் சவடு, கரிசல் மண் நிலத்தில் சில விவசாயிகள் ஐஸ் பார் தர்ப்பூசணி எனப்படும் பச்சை தர்ப்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது விதைத்தால் 80 நாளில் அதாவது ஏப்ரல் மாத்தில் அறுவடைக்கு வந்து விடுவதாகவும், அதுவும் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை எனும் ஆர்கானிக் முறையே சாகுபடி செய்வாதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.இயற்கை விவசாயி குருசுந்தர் கூறுகையில், ‘‘நெல்முடிக்கரையில் 2 ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி விதை நடவு செய்கிறோம்.
நிலத்தில் 8 அடிக்கு ஒரு பார் அமைத்து ஒரு அடி இடைவெளியில் விதை ஊன்றப்படுகிறது. பாரில் மல்சிங் சீட் விரித்து, அதில் உள்ள துளைகளில் விதைகளை நட்டு சொட்டு நீர்ப்பாசன முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைகள் சேலத்தில் இருந்து இந்த விதை வாங்கினோம்.
ஐஸ்பார் ரக விதை 50 கிராம் பாக்கெட் ரூ.1500லிருந்து 1600 வரை ஆகும். 2 ஏக்கருக்கு 10 பாக்கெட் தேவையாக உள்ளது. விதைத்த பின்னர் சொட்டு நீருடனே அமிர்தக்கரைசல், பச்சை இலை ஊறவைத்த கரைசல் போன்ற இயற்கை உரமும், இயற்கை பூச்சி விரட்டியும் பயன்படுத்தி வருகிறோம்.
நடவு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த் இயற்கை உரத்தையும் பூச்சி விரட்டி கரைசலையும் தயார் செய்து விடுவோம். ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட தர்ப்பூசணி பழங்களை கேரள வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். ஜனவரியில் நடவு, ஏப்ரலில் அறுவடைக்கு வந்து விடும், என்றார்.
The post திருப்புவனம் பகுதியில் ஏப்ரல் மாதத்திற்கு ரெடியாகும் இயற்கை முறை ‘பச்சை தர்ப்பூசணி’ appeared first on Dinakaran.