பாலக்காடு, அக்.14: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி, கல்லூர், பிலாப்பள்ளி, ஆலுவா, பெரும்பாவூர் ஆகிய இடங்களில் பிரவுன்சுகர் விற்பனை செய்யபடுவதாக போதை தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மாறுவேடங்களில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்புணித்துரையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா, பிரவுன் சுகர் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஆசாம் தம்பதி, போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில், அசாமை சேர்ந்த புளச்சன் அலி (32), இவரது மனைவி அன்ஜூமா பீகம் (23) என தெரியவந்தது. இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 26.7 கிராம் பிரவுன் சுகர், 243 கிராம் கஞ்சா, 2 லட்சத்து 51 ஆயிரத்து 490 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அசாம் மாநிலத்திலிருந்து ரயில் மார்க்கமாக கேரளாவிற்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்து தொழிலார் போர்வையில் தங்கியுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தம்பதி வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருப்புணித்துரையில் போதைப்பொருள் விற்ற தம்பதி கைது appeared first on Dinakaran.