“திருப்பரங்குன்றம் மலையில் நான் பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்!” - நவாஸ்கனி எம்.பி

6 hours ago 1

மதுரை: “நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும்” என நவாஸ்கனி எம்.பி சவால் விடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவுக்கு ஆடு, கோழிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதால், அது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையரிடம், தர்காவுக்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய திருப்பரங்குன்றம் சென்றோம். தர்காவுக்கு சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு. ஆடு, கோழிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டது. நாங்கள் ஏற்கெனவே உள்ள நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்க அனுமதிக்குமாறு காவல் ஆணையரை கேட்டுக்கொண்டுள்ளேன்.

Read Entire Article