
சென்னை,
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணைக்காக எச்.ராஜாவுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.இந்த நோட்டீசை எதிர்த்து எச். ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணைக்கு ஆஜராகக்கூறி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றும் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறும் எச்.ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.