திருப்பதியில் டிசம்பர் மாத சிறப்பு உற்சவங்கள் அறிவிப்பு

1 month ago 3


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் பல்வேறு உற்சவங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 1ம் தேதி முதல் 4ம் கட்ட அதர்வண வேதபாராயணம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 11ம் தேதி சர்வ ஏகாதசி, 12ம் தேதி சக்கரதீர்த்த முக்கோட்டி, 13ம் தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 14ம் தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம் நடைபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக 15ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும். தொடர்ந்து 16ம் தேதி மார்கழி மாதம் ஆரம்ப சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை நடைபெறும். 26ம் தேதி சர்வ ஏகாதசி, 29ம் தேதி மாத சிவராத்திரி, தொண்டரடிப்பொடியாழ்வார் வருட திருநட்சத்திரம், 30ம் தேதி அத்யாயின உற்சவம் தொடங்கி நடைபெற உள்ளது.

The post திருப்பதியில் டிசம்பர் மாத சிறப்பு உற்சவங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article