திருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைப்பு

7 months ago 24

திருப்பதி,

திருமலை திருப்பதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலைகளில் இருக்கும் சேதங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி அடுத்த சீரமைப்பு பணி 2030-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும். இந்த சூழலில், அங்குள்ள ராமர் சிலையின் விரலில் சிறிய சேதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ராமர் சிலை ஒரு மலை உச்சியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உற்சவத்தின்போது ராமர் சிலையில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை உடனடியாக சீரமைக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பதியில் சிலைகளின் சீரமைப்பு பணி இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகே மேற்கொள்ளப்படும். இதனிடையே ராமர் சிலையில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலை சமீபத்தில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ஜீயர்கள், ஆகம ஆலோசகர்கள், பூசாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேவஸ்தான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில் ராமர் சிலையை ஆகம முறைப்படி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article