“திருப்பதி லட்டு விவகாரத்தில் சுயநலத்தோடு செயல்படுகிறார் சந்திரபாபு” - நடிகை ரோஜா சாடல்

3 months ago 25

மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் சுயநலத்தோடு முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுகிறார் என ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா தெரிவித்தார்.

ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். கோயிலிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சுய நலத்தோடு செயல்படுகிறார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. தனது தவறைமறைக்கவே லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி மார்ச் மாதத்தோடு முடிந்தது. ஜூலைமாதத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது, 4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப் பட்டது.

Read Entire Article