திருப்பதி லட்டு கலப்பட்ட விவகாரம்... புதிய விசாரணைக்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

6 months ago 42
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டிற்கான நெய் கலப்பட புகார் குறித்து விசாரிக்க புதிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், அதில், 2 சி.பி.ஐ. அதிகாரிகள், 2 ஆந்திர காவல் அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சுதந்திரமான அமைப்பு இருந்தால், மக்கள் மத்தியில் அதன் மீது நம்பிக்கை பிறக்கும் எனத்தெரிவித்த நீதிபதிகள் தெய்வ நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை தணிக்கவே இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
Read Entire Article