திருப்பதி: திருப்பதி அருகே கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் உயிரிழந்த்துள்ளனர். திருப்பதி மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 5 வது மாடிக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கட்டுமான பணியின் போது கட்டிடத்தின் பூச்சு வேலைக்காக சாரம் கட்டப்பட்டு இருந்தது. அதில் தொழிலாளர்கள் இன்று வேலை செய்து கொண்டிருந்த போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது .
சாரம் சரிந்ததில், கட்டுமான தொழிலாளர்கள் மூன்று பேர் 5வது மாடியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணியின்போது கட்டட உரிமையாளர் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என புகார் எழுந்துள்ளது.
The post திருப்பதி மங்கலம் அருகே 5 வது மாடி கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.