திருப்பதி: கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

6 months ago 16

அமராவதி,

ஆந்திராவின் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு சென்ற மாநில வருவாய்த் துறை அமைச்சருமான அநகனி சத்ய பிரசாத், காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article