திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவருடன் பி.வி.சிந்து சாமி தரிசனம்

3 weeks ago 4

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரின் கணவர் வெங்கடதத்தா சாய் ஆகியோர் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து, அபிஷேக சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த அவர்களை, அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படத்தை அதிகாரிகள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்ததும், இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் கடந்த 22-ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article