திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற சிறப்பு கவுன்டர்: கூடுதல் செயல் அதிகாரி திறந்து வைத்தார்

2 months ago 7

திருமலை: ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் யாருடைய சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக வி.ஐ.பி. டிக்கெட்டுகளைப் பெற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் நன்கொடை பெற்று வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது. நேரடியாக திருமலைக்கு வரும் பக்கர்களுக்கு திருமலையில் ஆப்லைனில் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. இங்கு போதிய வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கோகுலம் கெஸ்ட் ஹவுஸ் பின்புறத்தில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுன்டரை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து நேற்று திறந்து வைத்தார். பக்தர்களிடம் விவரம் பெற்று கொண்டு முதல் டிக்கெட் வழங்கினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் வெங்கையா சவுத்திரி கூறுகையில், ‘கடந்த காலங்களில் ஸ்ரீவாணி கவுண்டர் வரிசைகளில் மழை பெய்தால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை உணர்ந்து சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. இனி ஸ்ரீவாணி டிக்கெட்டை பக்தர்கள் சிரமமின்றி பெறலாம். ஒரு நாளைக்கு 900 டிக்கெட்டுகள் ஆப்லைனில் வழங்கப்படும். ஒரே நிமிடத்தில் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற சிறப்பு கவுன்டர்: கூடுதல் செயல் அதிகாரி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article