சென்னை: திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தின் வனப் பகுதியான கோடகநல்லூர், பழவூர், சிவனார்குளம், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த டிச.16, 17, 18-ம் தேதிகளில் கொட்டப்பட்டன. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அந்த கழிவுகளை 3 நாட்களில் அகற்ற வேண்டும் என்று டிச.19-ம் தேதி கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.