திருநெல்வேலி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி

2 weeks ago 4

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் இருந்ததால் நம்பி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யானை வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்ததால் நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

துணை இயக்குநர்/வன உயிரினக்காப்பாளர்,களக்காடு சரணாலயம்,களக்காடு அவர்களின் உத்தரவின்பேரில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகம் நம்பிகோவில் பகுதியில் 31.10.2024ம் தேதி யானை நடமாட்டம் காரணமாக நம்பிகோவில் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யானை நடமாட்டமானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது.

தற்போது யானைக் கூட்டம் குட்டிகளுடன் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதையடுத்து 01.11.2024ம் தேதி முதல் நம்பிகோவில் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வன பகுதிகளுக்குள் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அமைதியான முறையில் சென்று வரவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. வனத்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு களக்காடு வனக்கோட்டம் திருக்குறுங்குடி வனச்சரகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post திருநெல்வேலி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article