திருநள்ளாறு கோவிலில் பக்தி பாடல் பாடி பாடகர் மனோ வழிபாடு

14 hours ago 1

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர். பக்தர்களுக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள் பாலித்தார்.

கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடினர். தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், திருநள்ளாறு கோவிலுக்கு இன்று பாடகர் மனோ தனது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது சனீஸ்வர பகவான் குறித்த பக்தி பாடலை மனம் உருகி பாடி, பாடகர் மனோ வழிபாடு செய்தார். இதனை அங்கிருந்த பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். 

Read Entire Article