திருத்தணி முருகன் கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

3 weeks ago 5


திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 31ம்தேதி திருப்புகழ் திருப்படி திருவிழா மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால்பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட வசதி செய்வது தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் மற்றும் இதர துறைகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கோயில் உதவி ஆணையர் விஜயகுமார் மேற்பார்வையில்,வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் சன்னதி தெரு, சரவணப்பொய்கை திருக்குளம், மலைகோயில் படிகள் இரண்டுபுறமும் ஆக்கிரமித்து வைத்திருந்த கூடாரங்கள், கடைகளை அகற்றப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article