திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்: எம்எல்ஏ நேரில் ஆய்வு

1 month ago 5

திருத்தணி: திருத்தணி தொகுதி முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருத்தணி தொகுதியில் உள்ள 330 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களில் புது வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, ஓட்டு உரிமைக்காக விண்ணப்பித்தனர்.

1.1.2025ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பெயர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு மேற்கொள்ள கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 330 வாக்கு சாவடி மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 வயது நிரம்பிய அனைவரும், தங்களை வாக்காளர்களாக பெயர் சேர்க்க ஏதுவாக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் வழங்கினர்.

முகாம்களில் திமுகவினர் ஆர்வத்துடன் பங்கேற்று பொதுமக்களுக்கு பெரும் உதவியாக செயல்பட்டனர். இதில் பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றியம், பள்ளிப்பட்டு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் முகாம்களில் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், பேரூர் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் புது வாக்காளர் சேர்க்கும் பணிகளில் ஆர்வம் காட்டினர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட முகாம்களில் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தொகுதி பார்வையாளர் சண்முகநாதன் ஆகியோர் பார்வையிட்டு வாக்காளர் பாட்டியல் சரிபார்ப்பு, தகுதியானவர்களை புதிய வாக்காளர்களாக சேத்தல் பணியில் திமுகவினர் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

The post திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்: எம்எல்ஏ நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article