திருச்சேறை மக்கள் நேர்காணல் முகாமில் 87 பயனாளிகளுக்கு ரூ.6.27 லட்சம் நலத்திட்ட உதவி

3 hours ago 4

 

திருவிடைமருதூர், மே 25: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நாச்சியார் கோவில் சரகம், திருச்சேறை ஊராட்சி ஆர்.கே.இராதாகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா ரூ.5,76,000 மதிப்பில் 9 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை ரூ.16,000 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகை ரூ.3,600 மதிப்பில் 3 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.25,500 மதிப்பில் 17 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற உதவித்தொகை ரூ.1,200 மதிப்பில் 1 பயனாளிக்கும், விதவை உதவித்தொகை ரூ.2,400 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை 25பயனாளிகளுக்கும், புதிய மின்னணு குடும்ப அட்டை 13 பயனாளிகளுக்கும், வேளாண்மை உழவர் மற்றும் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ரூ.1,180 மதிப்பில் 8 பயனாளிகளுக்கும், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.500 மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,000 மதிப்பில் 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.6,27,380 மதிப்பில் 87 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்பிரியங்கா பங்கஜம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, பொதுமக்கள் தமிழக அரசின் அனைத்து துறைகளின் திட்ட விபரங்களை அறிந்து கொள்வதற்கு இதுபோன்ற முகாம்கள் பயன்படுகிறது. அனைத்து துறை அலுவலர்கள் துறை சார்ந்த திட்ட விவரங்களை விளக்குவதற்கும், இம்முகாமில் தரப்படுகிற கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதன் வாயிலாக திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள முடிகிறது.

The post திருச்சேறை மக்கள் நேர்காணல் முகாமில் 87 பயனாளிகளுக்கு ரூ.6.27 லட்சம் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Read Entire Article