திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை

2 months ago 16

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வசந்த மண்டபத்தில் 2 நாட்கள் நடந்தது. கோவில் தக்கார் அருள் முருகன் தலைமை தாங்கினார்.

சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் ஒரு கிலோ 55 கிராமும், வெள்ளி பொருட்கள் 20 கிலோ 336 கிராமும், வெளிநாட்டு பண நோட்டுகள் 675-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

 

Read Entire Article