திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.3.62 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
இதன்படி கடந்த அக்.24 மற்றும் 25ம் தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது. 2 நாட்கள் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், 3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791 ரூபாயும், தங்கம் 1 கிலோ 55 கிராம், வெள்ளி 20 கிலோ 336 கிராம், பித்தளை 31 கிலோ 746 கிராம், செம்பு 3 கிலோ 12 கிராம், தகரம் 7 கிலோ 546 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 675ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ₹3.62 கோடி: 1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளியும் கிடைத்தது appeared first on Dinakaran.