திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல்

2 hours ago 1

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பவுர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். இதையடுத்து வழக்கமாக பவுர்ணமி நாட்களில் இரவில் கடற்கரையில் பல்லாயிரம் பக்தர்கள் தங்குவது வழக்கம்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல திருச்செந்தூரிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று பவுர்ணமி நாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால், கடற்கரையில் பக்தர்கள் தங்குவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article