திருச்சியில் வெல்டரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

3 months ago 20

திருச்சி, அக்.17: திருச்சியில் வெல்டரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் வாளப்பட்டியை சேர்ந்த வெல்டர் பிரபு(45). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள பிரபுவின் மாமியார் தங்கி இளைய மகன் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 14ம்தேதி மகனை மாமியார் வீட்டில் இருந்து முதலியார்சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு பாலக்கரை காஜாப்பேட்டை பசுமடம் பழைய ரயில்வே கேட் அருகே பிரபு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கும்பல் பிரபுவை வழிமறித்து மது குடிப்பதற்கு பணம் கேட்டனர். அதற்கு மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி பிரபு வைத்திருந்த ரூ.420 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து பசுமடத்தை சேர்ந்த முகமது செல்ஸ்ரா(20), ெபான்மலைப்பட்டியை சேர்ந்த தாமஸ் ஸ்டாலின்(21) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முஸ்தபாவை தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் வெல்டரிடம் பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article