திருச்சியில் கலைஞர் நூலகம் அமைப்பதற்கான கட்டுமான பணி மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!

4 weeks ago 7

சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியது. இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இதையடுத்து, நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான ரூ.175 கோடியில் கட்டுமானப் பணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ஜனவரி 30ம் தேதிக்குள்ளாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்ட 2 நாட்களில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது.

The post திருச்சியில் கலைஞர் நூலகம் அமைப்பதற்கான கட்டுமான பணி மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Read Entire Article