திருச்சி,ஏப்.24: பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் நடந்தது. இம்முகாமிற்கு நேரில் வந்து பொதுமக்கள் அளித்த 35 மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய தீர்வு காண அறிவுரை வழங்கினார். மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின்படி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காணாமல் போன செல்போன்கள் பற்றிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ₹.13 லட்சத்து ஜம்பாதியிரம் மதிப்புள்ள 95 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டது. அதனை கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் செல்போன் உரிமையாளர் களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உரியவரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வின்போது காவல் ஆணையர்கள் (வடக்கு & தெற்கு), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.
The post திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 95 செல்போன் உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.