சென்னை: திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில், ரூ.315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், சென்னை தரமணியைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், சென்னை பட்டாபிராம், மதுரையை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளியில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக திருச்சிராப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.