திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

3 months ago 14

திருச்சி,

திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627) நாளை (புதன்கிழமை) நெல்லை வரை மட்டுமே இயங்கும்.

இதேபோல் மறு மார்க்கமாக இயங்கும் திருவனந்தபுரம் - திருச்சி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22628) நாளை (புதன்கிழமை) நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு வரும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article