திருச்சி சிவாவுக்கு திடீர் பதவி... திமுகவில் நேருவுக்கும் முக்கியத்துவம் குறைகிறதா?

6 hours ago 1

வில்லங்கப் பேச்சால் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவரிடமிருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மூத்த அமைச்​ச​ரான பொன்​முடி​யின் கட்சி பதவியை பறித்​தது மற்​றவர்​களுக்​கான எச்​சரிக்​கை. அந்த வகை​யில் ஸ்டா​லின் எடுத்​துள்ள இந்த நடவடிக்கை கட்​சிக்கு ஆரோக்​கிய​மான விஷ​யம் தான் என்​றாலும் பொன்​முடி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை திருச்சி சிவாவுக்கு தந்​திருப்​பது பல்​வேறு ஊகங்​களைக் கிளப்பி விட்​டிருக்​கிறது.

இதன் மூலம் சில விஷ​யங்​களை திமுக தலைமை சொல்​லாமல் சொல்லி இருக்​கிறது என்​கி​றார்​கள் அரசி​யல் பார்​வை​யாளர்​கள். சிவாவை லைம்​லைட்​டுக்கு கொண்டு வந்​திருப்​ப​தன் மூலம் கட்​சி​யின் முதன்​மைச் செய​லா​ள​ரான அமைச்​சர் கே.என்​.நேரு​வுக்​கான முக்​கி​யத்​து​வம் குறைக்​கப்​பட்​டிருப்​ப​தாகச் அவர்​கள் சுட்​டிக்​காட்​டுகி​றார்​கள்.

Read Entire Article