திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை கைத்தறி கண்காட்சிகளில் ரூ.2.54 கோடிக்கு விற்பனை: கைத்தறித்துறை தகவல்

1 month ago 6

சென்னை: திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சிகளில் இதுவரை ரூ.2.54 கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாக கைத்தறித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 1,115 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் 2.59 லட்சம் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையயை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி துறையும், இந்திய அரசின் ஐவுளித் துறையும் இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சிகள் மற்றும் விற்பனையகங்கள் கடந்த டிச.27ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடந்து வருகின்றன.

பட்டு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கவும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் இருப்பு தேக்கத்தினை குறைத்திடவும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பட்டு கைத்தறி கண்காட்சி மதுரையில் 30ம் தேதிமுதல் நடந்து வருகிறது. இந்த கண்காட்சிகளில் நேற்று வரை ரூ.2.54 கோடி அளவிற்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை கைத்தறி கண்காட்சிகளில் ரூ.2.54 கோடிக்கு விற்பனை: கைத்தறித்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article